ஏசியின் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட விபத்து!!! அலுவலகத்தில் அதிபயங்கர தீ...! விளக்கம் வேண்டுமா?
Accident caused by AC electrical leakage Terrible fire in the office
சென்னைமாநகரில் எழும்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள டெலிகாம் அலுவலகத்தின் முதல் மாடியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

மேலும் அலுவலகத்தில் ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக, முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியானது.
இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் வந்தநர்.மேலும் இந்த இடத்திற்கு, வேப்பேரியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன.
பின்னர், தண்ணீரை பீய்த்து அடித்த தீயணைப்புத் துறையினர் போராடி அணைத்தனர்.
மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விபத்து சற்று பரபரப்பை அப்பகுதியில் ஏற்படுத்தியது.
English Summary
Accident caused by AC electrical leakage Terrible fire in the office