நெல்லை அருகே கோர விபத்து : 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்த சோகம்! - Seithipunal
Seithipunal


நெல்லை மாவட்டத்தில் உள்ள  கங்கைகொண்டான் ராஜபதியை சேர்ந்த ஆண்டாள், இவரது மருமகன் மற்றும் இரண்டு பேத்திகள் உடன் திருநெல்வேலி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது, இருசக்கர வாகனத்தை மருமகன் ஓட்டி வந்துள்ளார்.

தொடர்ந்து இருசக்கர வாகனம் தச்சநல்லூர் ரயில்வே மேம்பாலம் அருகே சென்றபோது, சேரன்மகாதேவியில் இருந்து திருநெல்வேலி ரயில் நிலையம் அருகே உள்ள ஊருடையான் குடியிருப்பு பகுதியில் டீசல் நிரப்புவதற்காக வந்த டேங்கர் லாரி, இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதி விபத்திற்குள்ளானது.

இந்த கோரா விபத்தில், சம்பவ இடத்திலேயே ஆண்டாள், அவரது மருமகன் மற்றும் அவரது 2 பேத்திகள் உயிரிழந்தனர்.தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நான்கு பேரின் உடலையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவினர் வழக்குப்பதிவு செய்து, சேரன்மகாதேவி டேங்கர் லாரி ஓட்டுநர் கண்ணனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

accident near nellai 4 people including 2 children died in tragedy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->