அதிகாலையில்! சிறையில் நடந்த கொடூரம்! கொலையா? 9 வயது சிறுமி வன்கொடுமை! பரபரப்பில் தமிழகம்! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளி சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமியை கடந்த மார்ச் மாதம் விவேகானந்தன் என்பவர் சிறுமையை பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமல்லாமல் கொலை செய்த சம்பவம்  புதுச்சேரி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

பின்னர், சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் சிறுமி கொலை வழக்கில் அதே பகுதியை சேர்ந்த கருணாஸ், விவேகானந்தன்  ஆகியோர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

இதுநிலையில் சிறுமியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர்களில் ஒருவரான விவேகானந்தன் என்பவர் சிறையில் உள்ள கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிறையில் அதிகாலையில் கழிவறைக்கு சென்ற விவேகானந்தன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சிறைதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது விவேகானந்தன் உடல் உடற்கூறு ஆய்வுக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Accused in Puducherry rape case of 9 year old girl hangs himself in jail


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->