டாக்டரிடம் ரூ.36,00,000 மோசடி! சிபிஐ அதிகாரிபோல் நடித்து டாக்டருக்கு விபூதி அடித்த மர்மநபர்! - Seithipunal
Seithipunal


சிபிஐ அதிகாரி பேசுவதாக கூறி சேலம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டரிடம் ரூ.36 லட்சம் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

சேலம் அரசு மருத்துவமனையில் டாக்டர் ஒருவரின் செல்போன் எண்ணுக்கு கடந்த மே மாதம் 10தேதி அழைப்பு ஒன்று வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அந்த மர்மநபர் சிபிஐ அதிகாரிபோல் டாக்டரிடம் உங்களுடைய ஆதார் எண்ணை பயன்படுத்தி புதியதாக சிம் கார்டு ஒன்று பெறப்பட்டுள்ளது.

அந்த செல்போன் எண்ணை தவறாக பயன்படுத்தி ஆள் கடத்தல் மற்றும் பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக உங்களது வங்கி கணக்குகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியவர் நான் தெரிவிக்கும் வங்கி கணக்கு பணம் மாற்றம் செய்ய வேண்டும்.

பின்னர், அதனை சரி பார்த்து விட்டு திரும்ப உங்கள் வங்கி கணக்கு அனுப்பி விடுவோம் என்று கூறியுள்ளார். இதனை உண்மை என நம்பி அந்த டாக்டர் 3 தவணையாக ரூ.36 லட்சத்தை அனுப்பி வைத்துள்ளார். அதன் அவருக்கு அந்த பணம் திருப்பி கிடைக்கவில்லை.

இதையடுத்து, சிபிஐ அதிகாரி பேசுவதாக கூறி தன்னிடம் ரூ.36 லட்சம் மோசடி செய்தது டாக்டருக்கு தெரிய வந்தது. பின்னர், இது குறித்து அவர் சேலம் மாநகர காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Acting as a CBI officer Fraud of Rs 36 Lakh from the doctor


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->