நினைவுச் சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை தேவை..விஜய் வசந்த் எம்.பி வலியுறுத்தல்!
Action is needed to protect monuments. Vijay Vasanth MP
வரலாற்று சிறப்புமிக்க நினைவுச் சின்னங்களை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்" என எம்பி விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம்,மாத்தூர் தொட்டிப்பாலத்தில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு கல்வெட்டு சேதம் அடைந்ததை தொடர்ந்து மீண்டும் அதே இடத்தில் புதிதாக கல்வெட்டு நிறுவப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இகுதுறித்து கன்னியாகுமரி தொகுதி எம்பி விஜய் வசந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.அதில் அவர் கூறியது:, "குறுகிய காலத்தில் இந்த கல் வெட்டினை மீண்டும் அமைத்தற்காக தமிழ்நாடு அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
மேலும் குமரியின் மேற்கு பகுதியின் உயர்வான ஊர்களுக்கு பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு சிற்றாறு அணையிலிருந்து நீர் கொண்டு செல்ல வேண்டும் என்ற பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் தொலைநோக்கு பார்வையில் கணியான் பாறை என்ற மலையும், கூட்டுவாவுப்பாறை என்ற மலையையும் இணைத்து இரண்டு மலைகளுக்கும் நடுவில் கட்டப்பட்டுள்ள அதிசயம் தான் மாத்தூர் தொட்டிப்பாலம் என எம்பி விஜய் வசந்த் கூறியுள்ளார்.
மேலும் கர்ம வீரரின் கனவு திட்டத்தை நினைவு கூரும் வகையில் இந்த கல்வெட்டு மீண்டும் அங்கு பதிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி என்றும் இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க நினைவுச் சின்னங்களை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்" என எம்பி விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.
English Summary
Action is needed to protect monuments. Vijay Vasanth MP