அதிரடி உத்தரவு!...அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இனி போலீஸ் பூத்! - Seithipunal
Seithipunal


சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில்,  தனது தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி, அங்கு பணியாற்றி வந்த மருத்துவர் பாலாஜிக்கு கத்தி குத்து நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, கத்தியால் குத்திய விக்னேஷ் என்பவரை போலீசார் கைது செய்த நிலையில், அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து,  விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும்,  விக்னேசுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று அரசு மருத்துவ சங்கங்களின்  கூட்டமைப்பினர்  கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போலீஸ் பூத் அமைக்கப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில், ஒவ்வொரு போலீஸ் பூத்திலும் 10 போலீசார் பணியில் ஈடுபடுவார்கள் என்றும், சென்னையில் உள்ள 19 மருத்துவமனைகளில் ஏற்கனவே 9 மருத்துவமனைகளில் காவல் நிலையம், பூத்துகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 10 மருத்துவமனைகளிலும் விரைவில்  போலீஸ் பூத்துகள் அமைக்கப்படும் என்றும் மாநகர காவல்துறை  தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Action order no more police booth in all government hospitals


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->