பா.ஜ.க நிர்வாகி சுப்பிரமணி மீது நடவடிக்கை தேவை.. காவல் ஆணையரிடம் புகார்!
Action should be taken against BJP functionary Subramani Complain to the Police Commissioner
மதரீதியாக பதட்டம் ஏற்படுத்த முயலும் பா.ஜ.க நிர்வாகி சுப்பிரமணி மீது வழக்கு பதிவு செய்திட வேண்டி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
கோவை உடையாம்பாளையம் பகுதியில் ஆபிதா என்ற பெண்மணி வறுமையின் காரணமாக உழைத்து வாழ வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் பசித்தவர்களுக்கு குறைந்த விலையில் சில்லி மற்றும் பீப் பிரியாணி கடை நடத்தி தன்னுடைய வறுமையை போக்கி வந்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட அணியின் நிர்வாகி சுப்பிரமணி இந்த பெண்ணின் கடைக்கு சென்று இங்கு நீ பீப் பிரியாணி வியாபாரம் பண்ண கூடாது என்று மிரட்டல் தொனியில் அந்த பெண்மணியையும் அவர் கணவரையும் மிரட்டியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது
ஆபிதா அவர்களின் கடையின் அருகில் அசைவ கடைகள் இருந்த போதும் இவர் இஸ்லாமிய பெண்மணி என்பதினால் இவர் மீது வெறுப்பு பேச்சு பேசி வெறுப்புணர்வை விதைத்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி சங்பரிவார சுப்பிரமணி .பொது வெளியில் மிரட்டும் தொனியில் பேசிய சுப்பிரமணி மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை மேற்கொண்டு இதுபோன்று எவரும் செயல்படாத வண்ணம் இந்த வழக்கை கையாள வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கோவை மாநகர காவல் ஆணையரை சந்தித்து தமுமுக மாவட்ட செயலாளர் முஜீப் ரஹ்மான் அவர்கள் தலைமையில்
புகார் மனு அளிக்கப்பட்டது.
மமக மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மாவட்டத் துணைத் தலைவர் அப்பாஸ், தமுமுக மாவட்ட துணை செயலாளர்கள் நூர்தீன் பைசல் ரகுமான், ஆஷிக் அகமது, ஷாஜகான், கலந்து கொண்டார்.
English Summary
Action should be taken against BJP functionary Subramani Complain to the Police Commissioner