நடிகர் சின்னி ஜெயந்தின் மகனுக்கு பாசி மணி மாலைகளைப் பரிசளித்த நரிக்குறவ பெண்கள் - காரணம் தெரியுமா?! - Seithipunal
Seithipunal



80 மற்றும் 90களில் மிகவும் பிரபலமான ஒரு காமெடி நடிகராக அறியப்பட்டவர் சின்னி ஜெயந்த். இவர் காமெடி கதாப்பாத்திரங்களில் மட்டுமல்லாது குணச்சித்திர வேடங்களிலும், வில்லனாகவும் கூட கதாநாயகனுக்கு நிகரான பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் அஷ்டலக்ஷ்மி கிரியேஷன்ஸ் என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். 

மேலும் மிமிக்ரி மற்றும் நகைச்சுவைக்காக டாக்டர் பட்டம் பெற்றுள்ள சின்னி ஜெயந்த்திற்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது மூத்த மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் கடந்த 2019ம் ஆண்டு UPSC தேர்வில் இந்திய அளவில் 75 ஆவது இடத்தைப் பெற்றதையடுத்து, இவர் முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி மேலாண்மைப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று, பின்னர் மத்திய அரசின் திறன் மேம்பாட்டு துணைச் செயலாளராக பணியாற்றினார். 

அதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் பயிற்சி துணை ஆட்சியராகவும், திருப்பூர் மாவட்டத்தின் துணை ஆட்சியராகவும் பணியாற்றிய ஸ்ருதன் ஜெய் நாராயணன், தற்போது விழுப்புரம் மாவட்ட துணை ஆட்சியராக நியமிக்கப் பட்டுள்ளார். 

இந்நிலையில் இவர்  தனது பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்களை நேரில் சென்று சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். மேலும் வீட்டுமனைப் பட்டா இல்லாத 7 நரிக்குறவர் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கினார். 

மேலும் ஏற்கனவே பட்டா வைத்திருந்தவர்களுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்குத் தேவையான ஆலோசனைகளை அதிகாரிகளுக்கு வழங்கினார். அப்போது அங்கிருந்த நரிக்குறவர் பெண்கள் சிலர் தாங்கள் செய்த பாசி மணி மாலைகளை ஸ்ருதன் ஜெய் நாராயணன் கழுத்தில் அணிவித்து மகிழ்ந்தனர். இந்த புகைப்படங்கள் தற்போது இனையத்தில் வைரலாகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Chinni Jayanth Son Got Gifted Beady by Narikuravar Ladies


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->