பேரவையில் தொடங்கி பந்தல் வரை... ''அரசியல் நாடகம்'' - எடப்பாடியாரை சாடிய நடிகர் கருணாஸ்.!  - Seithipunal
Seithipunal


கள்ளச்சாராய உயிரிழப்பை வைத்து எடப்பாடியார் கடந்த சில நாட்களாக நடத்தும் கள்ள நாடக காட்சிகள் பேரவையில் தொடங்கி உண்ணாவிரதம் பந்தல் வரை சகிக்க முடியவில்லை என நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவருமான கருணாஸ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாட்டின் அத்தனை உரிமைகளையும் பா.ஜ.க பிடுங்கிய போது எடப்பாடி தமிழ்நாடு உரிமை மீட்க ஒரு நாளும் உண்ணாவிரதம் இருந்ததில்லை. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராடிய போது அவர்களை கொன்று அழித்துவிட்டு, தொலைக்காட்சியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என சொன்னவர் எடப்பாடி. இது மட்டுமா எத்தனையோ தகிடுத்தத்தங்களையும் மறந்துவிட்டு எடப்பாடி இன்று உண்ணாவிரத நாடகமாடுகிறார். 

சட்டப்பேரவையில், எத்தனையோ மக்கள் பிரச்சனைக்கு பேசாமல் மௌனமாய் இருந்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி இன்று கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு காவடி ஆடுகிறார். எத்தனை முறை மக்கள் பிரச்சனையை பேச வந்த திமுகவை பேரவையிலிருந்து வெளியேற்றியுள்ளார்கள். அதுவும் மறந்து விட்டார் போல... 

எடப்பாடி செய்வது அரசியல் நாடகம் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள். கள்ளச்சாராய சம்பவம் நடந்த உடனே நீதி விசாரணை மற்றும் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டனர். 

ஆனால் கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து விவாதிக்க ஒத்துழைக்காமல் திசை திருப்பும் அரசியலை கையில் எடுத்து எடப்பாடி நாடகமாடுகிறார். எடப்பாடி ஆட்சியில் கள்ளசாராய மரணங்கள் நிகழவில்லையா? 

அதிமுக ஆட்சியில் நடந்த கள்ளச்சாராய மரணங்கள் மறைக்கப்பட்டது. இப்போது நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. கடந்த 2001 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் கடலூர், பண்ருட்டியில் 53 பேர் உயிரிழந்தனர். 200 பேரின் பார்வை பறிப்பானது. இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் பிறகு அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் ஒழிந்ததா? அப்போது எங்கு போயிருந்தார் எடப்பாடி என கருணாஸ் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor Karunas says Edappadi making fake Political


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->