இந்திய அண்டை எல்லைகளில் பதற்றம்!...பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு ராணுவ தளபதி உள்பட 6 பேர் பலி! - Seithipunal
Seithipunal


கடந்த 2021-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிய தலீபான்கள் அவ்வப்போது பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக  பாகிஸ்தான் எல்லையோர பகுதியில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்தும் காணப்படுகிறது. இதனால் ஆப்கானிஸ்தான் எல்லை அருகே ராணுவ வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், ஆப்கானிஸ்தான் எல்லையான வசிரிஸ்தான் நகரில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு கிடைத்த  ரகசிய தகவலின் பேரில்,அங்கு விரைந்து ராணுவ வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள்  ராணுவ வீரர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.  சம்பவத்தில் ராணுவ தளபதி உள்பட 6 ராணுவ வீரர்கள்  ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். இதையடுத்து  ஆப்கானிஸ்தானை தளமாக கொண்டு செயல்படும் தெஹ்ரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் அமைப்புஇந்த தாக்குதல் சம்பவத்துக்கு பொறுப்பேற்று உள்ளது.

முன்னதாக ஜம்மு காஷ்மீரில் நேற்று ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற கடுமையான துப்பாக்கி சண்டையில் என்கவுண்டரில்  2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இதில் ராணுவ வீரர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tension in india neighboring borders 6 people including the army commander were killed in the terrorist attack


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->