காலையிலே பெரும் சோகம்!கொட்டி தீர்த்த கனமழை: நிலச்சரிவில் சிக்கி 16 பேர் பலி! - Seithipunal
Seithipunal


போஸ்னியாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை பல்வேறு பகுதிகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஜப்லானிகா மற்றும் கொன்ஜிக் ஆகிய நகரங்கள் பெருமளவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அப்பகுதிகள் முழுமையாக வெள்ளக்காடாக மாறி, குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் போக்குவரத்து முற்றிலும் முடங்கிய நிலையில், பல கிராமங்கள் உலகில் இருந்து துண்டிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. 

வெள்ள பாதிப்பால் அவசரமாக மீட்பு நடவடிக்கைகள் துவங்கப்பட்டு, கிராமங்களில் சிக்கிக் கொண்டவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் பணியில் மீட்பு படையினர் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதற்கிடையே, ஜப்லானிகா நகரில் உள்ள ஒரு கல்குவாரியில் நடந்த பயங்கர நிலச்சரிவு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலச்சரிவில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்து, பல வீடுகள் முழுவதும் இடிந்து மண்ணில் புதைந்தன. 

நள்ளிரவு நேரம் என்பதால் பெரும்பாலான மக்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது, இதனால் அவர்கள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கி விட்டனர். பேரிடர் மீட்பு படையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களது மீட்பு பணிகள் விரைவாக துவங்கப்பட்டன. 

இந்த நிலச்சரிவில் சிக்கி 16 பேர் பலியாகியுள்ளனர், மேலும் பலர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் மண்ணில் புதையுண்டு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், அவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heavy rain in Bosnia 16 killed in landslides


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->