தொடர் விடுமுறை - தமிழகத்தில் சிறப்பு ரெயில் இயக்கம்.! - Seithipunal
Seithipunal


தொடர் விடுமுறையை முன்னிட்டு வருகிற 8, 9 தேதிகளில் சென்னை சென்டிரல் நிலையத்தில் இருந்து நாகர்கோவில், தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

* இன்று (6-ந்தேதி) இரவு 11.30 மணிக்கு கோவையிலிருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் அதிவிரைவு சிறப்பு ரெயில் மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். இதேபோல், மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து நாளை (7-ந்தேதி) காலை 10.30 மணிக்கு புறப்பட்டு கோவை வழியாக போடனூர் செல்லும் அதிவிரைவு சிறப்பு ரெயில், அன்று மாலை 6 மணிக்கு போடனூர் சென்றடையும்.

* சென்னை சென்டிரலில் இருந்து வரும் 8-ந்தேதி இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடி செல்லும் சிறப்பு ரெயில், மறுநாள் மதியம் 1.50 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். மறுமார்க்கமாக, தூத்துக்குடியில் இருந்து வரும் 9-ந்தேதி மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் சிறப்பு ரெயில், மறுநாள் காலை 8.55 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும்.

* சென்னை சென்டிரலில் இருந்து வரும் 9-ந்தேதி இரவு 7 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரெயில், மறுநாள் காலை 10.50 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து வரும் 10-ந்தேதி இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் சிறப்பு ரெயில், மறுநாள் காலை 11.25 மணிக்கு வந்தடையும்.

* திருச்சியில் இருந்து வரும் 11-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையில் வாரத்தின் 5 நாட்கள் காலை 5.35 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் அதிவிரைவு சிறப்பு ரெயில், அதேநாள் மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து வரும் 11-ந்தேதி முதல் 31-ந்தேி வரையில் வாரத்தின் 5 நாட்கள் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும் சிறப்பு ரெயில், அதேநாள் இரவு 11.35 மணிக்கு திருச்சி சென்றடையும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

special train run in tamilnadu for holiday


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->