பெண் போலீசாரிடம் அத்துமீறிய திமுகவினர் - நடிகை குஷ்பு கண்டனம்.!   - Seithipunal
Seithipunal


சென்னை விருகம்பாக்கத்தில் தசரதபுரம் பேருந்து நிலையத்தில் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இருபத்திரண்டு வயது பெண் போலீசிடம் தி.மு.க. இளைஞர் அணியை சேர்ந்த இரண்டு பேர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு பல அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், நடிகை குஷ்புவும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், "பெண்களை இழிவுபடுத்தும் ஆண்களை ஆதரிக்கும் கட்சியிடம் இருந்து என்ன எதிர்பார்க்க முடியும்? இதுபோன்ற நிகழ்வுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ணை மூடிக்கொண்டிருப்பது துரதிர்ஷ்டமானது" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor kushboo condemned for woman police sexuall harassment


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->