#BREAKING:: "ஆருத்ரா" நிறுவன மோசடி.. வெளிநாட்டில் பதுங்கிய நடிகர் "ஆர்.கே.சுரேஷ்"..! வெளியான பரபரப்பு தகவல்..!! - Seithipunal
Seithipunal


பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையில் வெளிவந்த உண்மை..!!

சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்ட் டிரேடிங் என்ற நிறுவனம் தமிழகத்தில் 13 கிளைகளை தொடங்கி பொதுமக்களிடம் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு சுமார் 2500 கோடி ரூபாய் முறைகேடு செய்திருப்பது அம்பலமானது.

தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதம்தோறும் 10 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாக கூறி தமிழக முழுவதும் பொதுமக்களிடமிருந்து 2500 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளனர். முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி தராமல் ஆருத்ரா நிறுவனம் மோசடி செய்ததாக முதலீட்டாளர்கள் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குனர்கள் 16 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்படுவதை தவிர்க்க அதற்காக ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவனான பாஜக நிர்வாகி ஹரிஷ் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்த நிலையில் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை அடுத்து கடந்த மார்ச் 24ஆம் தேதி பாஜக நிர்வாகி ஹரிஷ் மற்றும் நிறுவனத்தின் மற்றொரு இயக்குனரான நாராயணன் என்பவரையும் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆருத்ரா நிறுவனத்தின் பண மோசடி வழக்கில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நெருக்கமானவரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷிற்கு தொடர்பு இருப்பது பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையில் வெளிவந்துள்ளது.

ஆருத்ரா நிறுவன பண மோசடி வழக்கின் விசாரணையில் இருந்து தப்பிக்க ஆர்.கே.சுரேஷ் கடந்த 2 மாதங்களாக வெளிநாட்டில் தங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் கைதான நடிகர் ரூசோ அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் நடிகர் ஆர்.கே சுரேஷ் தனது குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாட்டில் தங்கி இருப்பதாக அவரது தரப்பிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தையே உலுக்கிய ஆருத்ரா நிறுவனம் பண மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே சுரேஷ் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்களை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சேகரித்து வருகின்றனர். மேலும் நடிகர் ஆர்.கே சுரேஷிடம் விசாரணை நடத்த சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor RK Suresh hiding abroad arudra company fraud


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->