ஆருத்ரா ரூசோவிடம் ரூ.15 கோடி பெற்றேன்.!! நடிகர் ஆர்.கே.சுரேஷ் பரபரப்பு வாக்குமூலம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தையே உலுக்கிய ஆருத்ரா மோசடி வழக்கு தொடர்பாக வெளிநாட்டில் தாய் மரமாக இருந்ததாக கூறப்பட்ட நடிகர் ஆர்.கே சுரேஷ் நேற்று சென்னை அசோக் நகரில் உள்ள தமிழ்நாடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

நேற்று மாநில பொருளாதாரம் குற்றப்பிரிவு போலீசாரிடம் நடிகர் ஆர்.கே சுரேஷ் அளித்த வாக்குமூலத்தில் ஆருத்ரா வழக்கில் கைதான ரூசோவிடமிருந்து ஒயிட் ரோஸ் படத்திற்காக ரூ.15 கோடி பெற்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். 

மேலும் ரூசோவிடம் இருந்து ரொக்கமாகவும் கோடிக்கணக்கான ரூபாய் ஆர்.கே சுரேஷ் பெற்றது போலீஸார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோன்று சொந்த செலவிற்கும், கட்சி நிகழ்ச்சிகளுக்கும் ரூசோவிடமிருந்து பெறப்பட்ட பணத்தை செலவழித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஆருத்ரா நிதி நிறுவன நிர்வாக இயக்குனர் ராஜசேகரை நடிகர் ஆர்.கே சுரேஷ் துபாயில் சந்தித்தாரா என்பது குறித்தும், தயாரிப்பாளர் ஓசோவிற்கும் ஆர்.கே சுரேஷுக்கும் இடையே உள்ள சினிமா பட ஒப்பந்தம் குறித்தும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று விசாரணை நடத்த உள்ளனர். நடிகர் ஆர்.கே சுரேஷிடம் நடத்தப்படும் விசாரணை அறிக்கை வரும் 18ஆம் தேதி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளனர் என்பதை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor RKSuresh confession received Rs15 crore from Arutha Rousseau


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->