ஆசையாய் கொடுத்த சால்வை - தூக்கி எறிந்த நடிகர் சிவகுமார்.! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் பழ.கருப்பையா எழுதிய "இப்படித்தான் உருவானேன்" நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவகுமார் மற்றும் பழ.நெடுமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் முடிவில் விழாவில் கலந்து கொண்ட நடிகர் சிவகுமாருக்கு வயதான முதியவர் ஒருவர் ஆசையாய் ஓடி வந்து சால்வை கொண்டு வந்து கொடுத்தார். அதனை நடிகர் வேகமாக பிடுங்கி வெறுப்புடன் தூக்கி வீசி எறிந்துவிட்டு சென்றார். இந்த செயல் அந்த முதியவரை மனம் நொந்து போகச் செய்தது.

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. சிவகுமார் தொடர்ந்து பொது நிகழ்வுகளில் இதுபோன்று நடந்து கொள்வது ரசிகர்கள் இடையே கோபத்தை வர வழைத்துள்ளது. வீடியோ வைரலானதைஎடுத்து அவருக்கு எதிராக பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor sivakumar throw taval in book publish function


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->