பஜ்ஜி சுட்டு வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அதிமுக சார்பில், வேட்பாளர்களை ஆதரித்து பொதுச்செயலாளர் பழனிசாமி பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில், நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் கூடலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை முதல் வாக்கு சேகரித்தார். 

பின்னர் மக்கள் மத்தியில் கூடலூரில் நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதாக வாக்குறுதி அளித்து பிரசாரம் செய்தார். இதைத் தொடர்ந்து மேல்கூடலூர் பகுதியில் மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்த அவர், கடைகளுக்குச் சென்று நோட்டீஸ் கொடுத்து வாக்கு சேகரித்தார்.

அப்போது, அங்குள்ள டீக்கடைக்கு சென்ற அவர், பஜ்ஜி சுட்டப்படியே அங்கிருந்தவர்களிடம் வாக்கு சேகரித்தார். இதை அப்பகுதி மக்கள் பார்த்து ரசித்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk candidate vote collect with bajji make in nilgiri


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->