செல்போன் ஆப் மூலம் போதை பொருட்கள் விற்பனை..4பேர் கைது!!
Selling narcotics through a cell phone app
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் போதை பொருட்களின் வகைகளும் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. போதை ஒழிப்பு குறித்து பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. பள்ளி மாணவர்கள் இடையே எளிதாக கஞ்சா போதை மாதிரி போன்று போதைப் பொருட்கள் எளிதாக கிடைப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்சி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை கொருக்குப்பேட்டையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்த 4 பேரைக் கைது செய்தது காவல்துறை. அவர்கள் கணேஷ் (21), ராஜேஷ் (22), ரஞ்சித் (27), உதயகுமார் (21) ஆகிய 4 பேரும் சேர்ந்து, 10 அட்டையை ₹4500க்கு வாங்கி 1 அட்டையை ₹2000க்கு விற்பனை செய்து வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
English Summary
Selling narcotics through a cell phone app