இப்படி சொல்ல வெட்கமாக இல்லையா? என்ன தான் ஆச்சு? கடும் கொந்தளிப்பில் எடப்பாடி பழனிச்சாமி! - Seithipunal
Seithipunal


இன்று சட்டமன்றம் கூடியதும் கேள்வி நேரத்திற்கு முன்னதாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து உடனடி விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பதாகைகள் ஏந்தி முழக்கமிட்டு வெளிநடப்பு செய்தனர். 

சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில், கள்ளச்சாராயம் குடித்து 55 பேர் பலியாகியுள்ளனர். இன்னும் 28 பேர் அபாயக் கட்டத்தில் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் கூறும் நிலையில், இதுகுறித்து அரசு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு நீதிவேண்டி, மக்கள் பிரச்சனையை சட்டமன்றத்தில் பேசவேண்டும் என்ற அடிப்படையில் அதுகுறித்து விவாதிக்க அனுமதி கேட்டோம். ஆனால் பேரவைத் தலைவர் மறுத்துவிட்டார்.

உண்மையிலேயே முதலமைச்சருக்கு தைரியம் இருந்தால் நேற்று நாங்கள் வெளிநடப்பு செய்வதற்கு முன்பாகவே நான் பதில் சொல்கிறேன் பேசி இருக்க வேண்டும்.

ஓடி ஒளியவில்லை என்று சொல்பவர் ஏன் மக்களைப் போய் பார்க்கவில்லை? முதல்வருக்கு தெரியாது என்று கூட்டணி கட்சித் தலைவர் சொல்வதற்கு வெட்கமாக இல்லையா? காங்கிரஸ் கட்சி திமுகவோடு 25 ஆண்டுகால ஒப்பந்தம் போட்டுவிட்டது.

மாவட்ட ஆட்சித் தலைவர் சரியான தகவலை சொல்லி இருந்தால் இவ்வளவு மரணங்கள் ஏற்பட்டு இருக்காது. இதற்கு முழுக்காரணம் ஆளும் திமுக அரசு. நாட்டையே உலுக்கிய கள்ளக்குறிச்சி சம்பவத்தின் வழக்கை உடனடியாக சிபிஐக்கு மாற்ற வேண்டும்.

விஷச்சாராயம் முறிவுக்கான ஹோமிபிசோல் மருந்தை தான் நான் குறிப்பிட்டேன், அமைச்சர் Omeprazole மருந்து குறித்து தெரிவித்துள்ளார். அமைச்சரே மருந்தின் பெயரை மாற்றி கூறிவிட்டு இருப்பு இருப்பதாக தவறாக பேசியுள்ளார்" என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

மேலும், சட்டப்பேரவையில் திமுகவினர் எப்படி நடந்துகொண்டனர் என்பதை விளக்க, 18.02.2017 அன்று சட்டப்பேரவையில் திமுக நடத்திய ஜனநாயகப் படுகொலையின் காட்சிகளை செய்தியாளர்கள் சந்திப்பிலேயே எடப்பாடி பழனிச்சாமி காண்பித்தித்து விவரித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Edappadi K Palanisamy Condemn to DMK And Congress Kallasarayam issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->