30 நிமிடம்! ஆளுநரிடம் பேசியது என்ன? எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அக்கட்சியை சேர்ந்தவர்கள், ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்று, ஆளுநரிடம் புகார் மனுவை கொடுத்துள்ளனர். பின்னர் சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் ஆளுநரிடம் அதிமுகவினர் ஆலோசனை செய்தனர். 

ஆளுநர் உடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி தெரிவிக்கையில், "நாங்கள் அளித்துள்ள புகார் மனுக்களை ஆளுநர் பரிசினை செய்வதாக கூறி இருக்கிறார். இந்த விடியா திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல் நடைபெறுகின்றன. 

தமிழக மக்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகளை ஆளுநரிடம் தெரிவித்துள்ளோம். திமுக அரசின் இந்த இரண்டு ஆண்டு கால ஆட்சியில் நடைபெற்றுள்ள ஊழல்கள் குறித்தும் ஆளுநரிடம் மனுவாக அளித்துள்ளோம்.

சட்டம் ஒழுங்கு சீர்கேடு தொடர்பாகவும் நாங்கள் ஆளுநரிடம் புகார் மனு ஒன்றை தனியாக கொடுத்துள்ளோம். நேர்மையாக செயல்படும் அதிகாரிகள் திமுக அரசால் பாதிக்கப்படுகின்றனர். தூத்துக்குடியில் ஒரு விஏஓ படுகொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் நேர்மையாக செயல்படும் கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு மிரட்டல் வருகின்றது.

தஞ்சையில் இரண்டு பேர் நேற்றைய தினம் போலி மதுபானத்தை குடித்தே உயிரிழந்துள்ளனர். போலி மதுபானம் குறித்த தகவல்கள் வெளியே வரக்கூடாது என்பதற்காக, அதிகாரிகளைக் கொண்டு பொய்யான தகவலை (சயனைடு) கொடுத்து கொண்டிருக்கிறது.

உயிரிழந்த இருவரின் உடல்களையும் பாண்டிச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று ஊடகத்தின் வாயிலாக நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Edappadi Palanisami meet RN Ravi And press meet may


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->