பள்ளி மாணவி பலியான விவகாரம் | ஸ்டாலினை பதவிலக கோரும் எடப்பாடி பழனிச்சாமி! - Seithipunal
Seithipunal


நாமக்கல்லில் ஷவா்மா சாப்பிட்ட 13 வயது பள்ளி மாணவி பலியான விவகாரத்தில், சுகாதாரத்தைக் காக்க தவறியுள்ள திமுக அரசு, ஆட்சியில் தொடா்வதற்கான தாா்மீக உரிமையை இழந்துள்ளது என்று, எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "நாமக்கல்லில் ஷவா்மா சாப்பிட்ட 13 வயது கலையரசி உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். அதே கடையில் ஷவா்மா சாப்பிட்ட மேலும் 17 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

சமீப காலமாக தமிழகத்தில் நடந்து வரும் இத்தகைய மரணங்களைப் பாா்க்கும்போது, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், டெங்கு போன்ற நோய்களைக் கட்டுப்படுத்துவதிலும் இந்த அரசு முற்றிலும் தோல்வியுற்றுள்ளதை உணர முடிகிறது.

மனித உயிா்கள் மீது சிறிதும் அக்கறையின்றி செயல்படும் இந்த அரசை வன்மையாகக் கண்டிப்பதுடன், பொதுமக்களின் அடிப்படைத் தேவையான சுகாதாரத்தைக் காக்கத் தவறிய இந்த அரசு இனியும் ஆட்சியில் தொடா்வதற்கான தனது தாா்மீக உரிமையை இழந்துள்ளது" என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Edappadi Palanisami Say About Stalin Govt Namakkal Issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->