அந்த உயிர்கொல்லி... அய்யயோ தமிழகத்திற்கு ஆபத்து - தமிழக அரசுக்கு பறந்த அவசர கோரிக்கை! - Seithipunal
Seithipunal


கேரளாவில் அமீபா நுண்ணுயிர் பரவலால் சிறுவன் பலியான நிலையில், தமிழ்நாட்டில் இத்தகு பரவல்கள் ஏற்படாவண்ணம் முன்னெச்சரிக்கையுடன் தமிழக அரசு செயல்பட வேண்டும் என்று, அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி அவசர கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "கேரளா மாநிலத்தில் அமீபா நுண்ணுயிர் பரவலால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு மூவர் உயிரிழந்துள்ளதாக வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

கேரளாவில் இந்த நுண்ணுயிர் பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் இத்தகு பரவல்கள் ஏற்படாவண்ணம் முன்னெச்சரிக்கையுடன் அரசு செயல்பட வேண்டும்.

அசுத்தமான நீரின் வாயிலாகவே பரவும் இந்த நுண்ணுயிர், குழந்தைகளை தொற்றும் ஆபத்து அதிகம் உள்ளதால், மக்களின் உயிர்களைக் காக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அதிக கவனத்தை  செலுத்துமாறு இந்த விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி தெரிவிக்கையில், "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. காவல்துறையை கண்டு யாரும் அச்சப்படுகிற சூழல் இல்லை.ஆட்டை வெட்டுவது போல, மனித உயிர்களை சர்வ சாதாரணமாக வெட்டி சாய்க்கின்றனர்.
 
தமிழ்நாட்டில் அண்மை காலமாக அரசியல் கட்சித்தலைவர்கள் மர்மான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். நெல்லையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயக்குமார், சேலத்தில் அதிமுக நிர்வாகி சண்முகம், சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இது போன்ற கொலை சம்பவங்கள் தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சரியாக இல்லை என்பதைக் காட்டுகின்றன. இது போன்ற சம்பவங்கள் பொது மக்களுக்கும், அரசியல் கட்சி தலைவர்களுக்கும் பாதுகாப்பான சூழல் தமிழ்நாட்டில் இல்லை என்பதை தெளிவுப்படுத்துகிறது" என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Edappadi Palanisamy say about kerala Amoeba microbe


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->