CM ஸ்டாலினுக்கு மேலும் நெருக்கடி! டெல்லி செல்லும் எடப்பாடி பழனிச்சாமி!
ADMK Edappadi Palaniswami Delhi trip Kallakurichi Illegal Liquor
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று இரவு டெல்லி பயணம் செய்ய உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், எடப்பாடி பழனிச்சாமி இந்த டெல்லி பயணத்தின் போது குடியரசு தலைவர் திரவுபதி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து, சில மனுக்களை அளிக்க உள்ளதாகவும் வெளியான அந்த பரபரப்பு தகவல் தெரிவிக்கின்றது.
தமிழகத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று, தொடர்ந்து அதிமுக வலியுறுத்தி வருகிறது,. இதற்காக சட்டமன்றத்தில் விவாதம் நடத்த கோரி அமளியில் ஈடுபட்டு அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதும், பின்னர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி தமிழக ஆளுநரை நேரில் சந்தித்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள், இதுகுறித்து புகார் மனு ஒன்றையும் அளித்திருந்தனர்.
இந்த நிலையில், இன்று மாலை சேலத்தில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி, டெல்லி சென்று குடியரசுத் தலைவர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து இந்த விவகாரம் குறித்து புகார் மனு அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி தொடர்ந்து தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். நாளை சென்னை உயர்நீதிமன்றத்திலும் இதுகுறித்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
ADMK Edappadi Palaniswami Delhi trip Kallakurichi Illegal Liquor