அதிமுக - பாஜக கூட்டணி இனி இல்லையா? அடுத்து என்ன? முக்கிய அறிவிப்பால் அதிரும் அரசியல் களம்!
ADMK Edappadi Palaniswami announce District Secretary meet 25092023
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாமா? வேணாமா? என்பது குறித்து ஆலோசனை செய்ய, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்ட உள்ளார்.
இதுகுறித்து அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அ.தி.மு.க. கழகப் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைக்கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் (25.9.2023) நாளை பிற்பகல் 3.45 மணிக்கு, தலைமைக்கழக செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரறிஞர் அண்ணா குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறிய கருத்தால், அ.தி.மு.க.- பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இத்தனை உறுதி செய்யும் விதமாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.
மேலும், அண்ணாமலையை மாற்றினால் தான் கூட்டணி என்று டெல்லி தலைமைக்கு அதிமுக தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை நடக்க உள்ள அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
English Summary
ADMK Edappadi Palaniswami announce District Secretary meet 25092023