திராவிடமணி மர்ம மரணம்? வாரிசுக்கு முடி சூட்டுவதில் மட்டும் கவனம் - எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


திருச்சி மாநகர், ஜீயபுரம் தனிப்படை காவல்துறையினர் கடந்த 26ம் தேதி திராவிட மணியை சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக அழைத்துசென்று, 27ம் தேதி வரை போக்குவரத்துக் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்துள்ளனர்.

பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த திராவிட மணி கடந்த 28ஆம் தேதி உயிரிழந்தார்.  நல்ல உடல் நலத்துடன் இருந்த திராவிட மணி திருச்சி காவல்துறையினர் கடுமையாக தாக்கியதிலேயே உயிரிழந்துள்ளார் என்று அவரது குடும்பத்தினர் உடலை வாங்க மறுத்து நீதி விசாரணைக்கோரி போராட்டம் நடத்தி இருந்தனர்.

இந்த நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "திருச்சி மாவட்டம் பழூரைச் சேர்ந்த திராவிடமணி என்பவர், திருச்சி மத்திய சிறையில் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

விடியா திமுக ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள் என்பது தொடர்கதையாகிவிட்ட நிலையில், காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சொல்லும் விடியா திமுக முதல்வரோ, தன் வாரிசுக்கு முடி சூட்டுவதில் மட்டும் கவனம் செலுத்துவது கண்டனத்திற்குரியது.

உயிரிழந்த திராவிடமணியின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்கவும், மரணம் குறித்த உண்மைக் காரணத்தைக் கண்டறிந்து, தொடர்புள்ளோர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், இனி இது போன்ற சம்பவங்கள்  நிகழாவண்ணம் உறுதிசெய்யுமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்" என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK EPS Condemn to DMK MKStalin Trichy Lockup Death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->