நீட் தேர்வு தோல்வி: தற்கொலை செய்து கொண்ட மாணவி குடும்பத்திற்கு இபிஎஸ் ஆறுதல்!
ADMK EPS condolence salem Neet student death
நீட் தேர்வில் தோல்வியின் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சேலம் எடப்பாடியை சேர்ந்த மாணவி புனிதாவின் திருவுருவ படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, மாணவியின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்ததாவது, சேலம் அருகே குப்பதாசன்வளவு பகுதி மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் வேதனை அளிக்கிறது.
ஏழை,எளிய குடும்பத்தை சேர்ந்த அரசுபள்ளி மாணவர்களின் கனவை நிறைவேற்ற தான் 7.5% உள்இட ஒதுக்கீடு திட்டம் கொண்டு வரப்பட்டது.
நீட் தேர்வில் போதிய மதிப்பெண் கிடைக்காத சூழ்நிலையில் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் அவரது குடும்பத்தையும் பெற்றோரையும் நினைத்து அவர்களது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
நீட் தேர்வில் போதிய மதிப்பெண் பெற முடியாத சூழ்நிலை ஏற்படும் போது மனவேதனை அடைந்து இப்படிப்பட்ட துயரமான செயல்களில் மாணவர்கள் ஈடுபட கூடாது. பல்வேறு படிப்புகள் இருக்கின்றன,அதில் கவனம் செலுத்தி வாழ்வில் முன்னேறலாம்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 41 மாதங்கள் ஆகியும் நீட் தேர்வுக்கு முடிவு எட்டப்படவில்லை
திமுக ஆட்சியில் நீட் தேர்வுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?, அதனால் மாணவர்களுக்கு என்ன நன்மைகள் ஏற்பட்டதென தெரியவில்லை? என்று தெரிவித்தார்.
English Summary
ADMK EPS condolence salem Neet student death