திமுகவுடன் இருந்த அண்ணன் தம்பி உறவு எல்லாம் 1972லேயே முடிந்துவிட்டது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.!
admk ex minister jayakumar press meet
சென்னையில் உள்ள புளியந்தோப்பில் வீடு இடிந்ததில் பலியான பெண்ணின் குடும்பத்தாருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அதன்பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
"சாந்தி மீது வீட்டின் பால்கனி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட உடனே ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால், இரண்டு மணி நேரமாக 108 ஆம்புலன்ஸ் வரவில்லை. ஆம்புலன்ஸ் உடனடியாக வந்திருந்தால் சாந்தியின் உயிரை காப்பாற்றியிருக்கலாம். ஆனால், அவசர காலத்திற்கு கூட உதவ முடியாமல் தான் மருத்துவத்துறை உள்ளது.
இதையடுத்து, சாந்தியின் குடும்பத்தினருக்கு மேயர் மற்றும் எம்.எல்.ஏ உட்பட இதுவரை யாரும் ஆறுதல் சொல்ல கூட வரவில்லை. நன் அவரின் குடும்பத்தினருக்கு 25 ஆயிரம் நிவாரணம் கொடுத்துள்ளேன். ஆனால், அரசு இதுவரை எதுவுமே செய்யவில்லை.
இதைத்தொடர்ந்து, சென்னையில் மழை நீர் வடிந்துவிட்டது என்று ஒரு மாயபிம்பத்தை உருவாக்குகின்றனர். ஆனால், முதலமைச்சரின் தொகுதியான கொளத்தூரிலேயே தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதற்கிடையே ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செய்தி வெளியிடாத ஊடக நிறுவனங்களை திமுக அரசு மிரட்டி வருகிறது.
மேலும், அதிமுகவை இயக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை. தேர்தல் சமயத்தில் மட்டும் தான் பாஜகவுடன் கூட்டணி. திமுகவுடன் இருந்த அண்ணன் தம்பி உறவு எல்லாம் 1972லேயே முடிந்துவிட்டது. தற்போது, திமுக தான் எங்கள் பகையாளி என்றுத் அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
admk ex minister jayakumar press meet