அனுமதியின்றி போராட்டம் - கடலூரில் அதிமுகவினர் கைது.! - Seithipunal
Seithipunal


சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்த தவறியதும், சட்டம்-ஒழுங்கு பாதுகாக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும் கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதிமறுத்து அ.தி.மு.க. சார்பில் மேடை அமைக்காத வகையில் வாகனங்களை நிறுத்தி வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால், வாகனத்தில் பேனர் வைத்துக்கொண்டு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத் தலைமையில் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

அந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் முன்னாள் அமைச்சர் எம்.சி.தாமோதரன், முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம், மாவட்ட அவைத்தலைவர் சேவல்குமார், மற்றும் ஏராளமான அ.தி.மு.க.வினர் கண்டன கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென்று போலீசார் மைக் இணைப்பை நிறுத்தினர். இதனால் ஆவேசமடைந்த அ.தி.மு.க.வினர் போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பினர். உடனே போலீசார் மீண்டும் மைக் இணைப்பு கொடுத்தனர். தொடர்ந்து அ.தி.மு.க.வினர் கோஷத்தை நிறுத்தாமல் ஆக்ரோஷமாக பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு இருந்த போலீசார் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று கூறி வாகனத்தில் நின்று கொண்டிருந்த முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளையும் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை வாகனத்தில் ஏற்றுவதற்கு முயன்ற போது அ.தி.மு.க.வி னருக்கும், போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதுடன் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. 

பின்னர் போலீசார் அனைவரையும் வாகனத்தில் ஏற்றி கைது செய்து அனைவரையும் தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk fans arrested for protest in cuddalore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->