கோவை : பட்ஜெட் தாக்கலின் போது வெளிநடப்பு செய்த அதிமுக நிர்வாகிகள் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


இன்று கோயம்புத்தூர் மாநகராட்சியில் பட்ஜெட் கூட்டம் நடைபெற்றது. இந்த பட்ஜெட்டை மேயர் கல்பனா ஆனந்த்குமார் தாக்கல் செய்தார். இதைப்பார்த்த அதிமுக உறுப்பினர்கள் இந்த பட்ஜெட் வெறும் காகித அறிக்கை என்று கூறி எதிர்ப்பு தெரிவித்து விட்டு கூட்டத்திலிருந்து வெளியேறினார்கள். 

அதன் பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, "இன்று கோவை மாநகராட்சியில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்  அறிக்கையில்  கடந்தாண்டு பட்ஜெட்டில் தெரிவித்ததை தான் இந்தாண்டும் சொல்லி உள்ளார்கள். மக்களுக்கு நன்மை ஏற்படுத்தும் திட்டங்கள் குறித்து எதுவும் இந்த பட்ஜெட்டில் இல்லை. 
 

நடப்பாண்டில் கோவை மாநகராட்சிக்கு ரூ.700 கோடி வருவாய் அதிகமாக வந்துள்ளது. மக்களிடம் சொத்துவரியை அதிகப்படுத்தி தான் இந்த வருவாயை வாங்கி உள்ளனர்.  இந்த அளவிற்கு பெரிய நகரமாக கோவைக்கு இந்த வருடம் எந்த திட்டமும் உருப்படியாக இல்லை. 

அதிமுகவைப் பொருத்தவரை இந்த பட்ஜெட் என்பது மக்களுக்கு உதவாத வெற்று காகித பட்ஜெட்"  என்றுத் தெரிவித்தனர். இதற்கு முன்னதாக, பட்ஜெட் கூட்டத்திற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புச் சட்டை அணிந்து வந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk leaders walk out during covai corporation budget presentation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->