பரபரப்பான சூழ்நிலையில் ஆளுநரை சந்திக்கும் அதிமுகவினர்!
ADMK Side meet TN Governor For Kallasarayam issue
கடந்த 13 ஆம் தேதி விஷ சாராயம் அருந்திய சம்பவத்தில். விழுப்புரம் மாவட்டத்தில் 13 நபர்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 நபர்களும் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இதுவரை சுமார் 11 பேரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில் பலியானவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50,000 ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் கள்ளச்சாராத்தை முற்றிலும் ஒழிக்கும் விதமாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.
குறிப்பாக கடந்த மூன்று தினங்களில் தமிழகம் முழுவதும் கள்ளச்சாராம் விற்பனை செய்தவர்கள், தயாரித்தவர்கள் என்று சுமார் 1500 க்கும் மேற்பட்டோர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மாவட்ட ஆட்சியர்கள், போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டும், இடமாறுதல் செய்யப்பட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கள்ளச்சாராயத்தால் பலியாகி 21 பேரின் விவகாரத்தை, ஆளுநரிடம் சென்று புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இன்னும் சற்று நேரத்தில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழக ஆளுநரை சந்தித்து புகார் மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
ADMK Side meet TN Governor For Kallasarayam issue