55 வருடங்களுக்குப் பிறகு தந்தையின் கருவறையை கண்டுபிடித்த சமூக ஆர்வலர்.!
after fifty five years son found father womb
தென்காசி மாவட்டத்தில் உள்ள வெங்கடாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் திருமாறன். இவரின் தந்தை பூங்குன்றன் என்ற ராமசுந்தரம்.இவர் மலேசியா நாட்டில் ஆசிரியராக வேலைபார்த்து வந்தார். இந்நிலையில், இவர் கடந்த 1967-ம் ஆண்டு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
அப்போது அவருடைய மகன் திருமாறன் பிறந்து 6 மாதங்களே ஆகியிருந்ததனால் அவரது தாயார், கணவரின் உடலை மலேசியாவிலேயே அடக்கம் செய்து விட்டு திருமாறனை அழைத்து கொண்டு சொந்த ஊருக்கு வந்து விட்டார். இந்தியாவுக்கு வந்த சில ஆண்டுகளில் திருமாறனின் தாயாரும் இறந்து விட்டார்.
பெற்றோரை இழந்து தவித்த திருமாறன் சமூக பணிகளில் ஆர்வம் காட்டி, அனாதை ஆசிரமம் தொடங்கி அவர்களை பராமரித்து வந்தார். அவர்களுக்கு உதவி செய்வது, அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது என்று தனது காலத்தை கடத்தி வந்தார். இருந்தாலும் அவர் மனதில் தன் தந்தை பற்றிய நினைவுகள் அடிக்கடி தோன்றி கொண்டே இருந்தது.
குழந்தை பருவத்தில் இறந்துபோன தந்தையின் கல்லறைக்கு சென்று மரியாதை செலுத்த வேண்டும் என்று விரும்பி மலேசியாவில் அவரது குடும்பத்தினர் தங்கி இருந்த பகுதியை இணையதளத்தில் தேடி கண்டுபிடித்தார். அதன் பின்னர் தனது தந்தை ஆசிரியராக இருந்தபோது அவரிடம் படித்த மாணவர்கள் விபரத்தை திரட்டினார். அதில் இருவரின் விபரங்கள் கிடைத்தது.
அவர்கள் மூலம் திருமாறன் தனது தந்தையின் கல்லறையை அறிந்து கொண்டு, மலேசியாவுக்கு செல்ல திட்டமிட்டார். சுமார் 55 ஆண்டுகளுக்கு பிறகு அவர் தனது தந்தையின் கல்லறையை தேடி கடந்த 8-ந் தேதி மலேசியாவுக்கு சென்றார்.
அங்கு சென்ற பின், தனது தந்தையிடம் படித்த மாணவர்கள் உதவியுடன் அவரது கல்லறையை கண்டுபிடித்தார். ஒரு புதருக்குள் இருந்த கல்லறையில் தந்தையின் பிறப்பு, இறப்பு பற்றிய விபரங்கள் இருந்ததை பார்த்து கண்ணீர் விட்டு கதறினார். மேலும், அந்த கல்லறையின் முன்பு நின்று புகைப்படம் எடுத்து கொண்டு தந்தையின் நினைவுகளோடு சொந்த ஊருக்குச் சென்றார்.
English Summary
after fifty five years son found father womb