குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கான வயது உயர்வு.!
age increase for student joining school in kerala
நமது அண்டை மாநிலமான கேரளாவில் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கான குறைந்தபட்ச வயது 5ல் இருந்து 6-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேரள கல்வி அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்துள்ளதாவது:- "மாநிலத்தில் 1 ஆம் வகுப்பு சேர்க்கைக்கான குறைந்தபட்ச வயது ஆறு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரைக்கும், ஐந்து வயதில் குழந்தைகளை 1 ஆம் வகுப்பில் சேர்க்கப்படலாம்.

ஆனால் ஆறு வயதை எட்டிய பிறகு அவர்கள் முறையான கல்விக்கு சிறப்பாக தயாராக இருப்பதாக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கேரளாவில், பாரம்பரியமாக பெற்றோர்கள் ஐந்து வயதில் குழந்தைகளை 1 ஆம் வகுப்பில் சேர்ப்பது வழக்கம்.
ஆனால், 50 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் இப்போது ஆறு வயதில் பள்ளிக்குச் செல்கிறார்கள். மேலும், இந்தப் போக்கு ஊக்குவிக்கப்பட வேண்டும். 1 ஆம் வகுப்பு சேர்க்கைக்கான திருத்தப்பட்ட வயதுத் தேவை 2026–27 கல்வியாண்டிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்தார்.
English Summary
age increase for student joining school in kerala