சென்னையில் பரபரப்பு.. பல மாவட்டங்களில் இருந்து குவியும் இளைஞர்கள்.. வெடிக்கும் போராட்டம்.!!
agnipath protest in chennai
இந்தியாவில் ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் நான்கு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் ஆள் சேர்க்கும், அக்னிபத் திட்டத்திற்கு கடுமையாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குறிப்பாக வடமாநிலங்களில் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் பீகார் இராணுவ வேலை வாய்ப்பை எதிர்நோக்கி உள்ள பல்வேறு இளைஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் பல்வேறு பகுதிகளில் வன்முறையாக மாறி உள்ளது.
பல மாநிலங்களில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில்கள் எரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தெற்கு ரயில்வே மண்டலத்திலிருந்து பீகார், கிழக்கு உத்தரப்பிரதேச பகுதிகளுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் அக்னிபாத் போராட்டங்களால் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து செகந்திராபாத் செல்லும் சபரி விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தப் போராட்டம் தற்போது சென்னையிலும் வெடிக்கத் தொடங்கியுள்ளது. அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக சென்னை தலைமை செயலகம் அருகே இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆரணி, கோயம்புத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களிலிருந்து வந்த இளைஞர்கள் சென்னையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
agnipath protest in chennai