வேளாண் மற்றும் மீன்வள படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.! - Seithipunal
Seithipunal


வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண் மற்றும் மீன்வளப் படிப்புக்கு நடப்பாண்டு முதல் ஒரே விண்ணப்பம் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.

அந்த வகையில் வேளாண் மற்றும் மீன்வள படிப்புகளில் சேர  http://tnau.ucanapply.com என்ற இணையதளம் மூலம் கடந்த மே 10ம் தேதி முதல் ஜூன் 9ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதில், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணையதளத்தில் ஜூன் 9-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுருந்த நிலையில், விண்ணப்பிப்பதற்கு ஜூலை 1-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதில், விண்ணப்பிக்க பொது பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.500 எனவும், பட்டியலினத்தவருக்கு ரூ.250 எனக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Agriculture and fishing education apply date extended


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->