ஈரோடு: வேளாண் பட்டதாரிக்கு சுய தொழில் தொடங்க மானியம்
Agriculture graduate given grant to start self-employment
ஈரோடு மாவட்டத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் 44 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில், அக்ரி கிளினிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் தொடங்கும் வேளாண் பட்டதாரி ஒருவருக்கு ரூ.1 லட்சம் வீதம் 6 பேருக்கு ரூ.6 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் பயன் பெற விரும்புவோர் இளநிலை வேளாண்மை, தோட்டக்கலை அல்லது வேளாண்மை பொறியியல் பட்டப் படிப்பு படித்து இருக்க வேண்டும். அரசு அல்லது தனியார் துறையில் பணியாற்றுபவராக இருக்க கூடாது.
கணிணி மற்றும் இதர வேளாண் செயலிகளில் பணியாற்ற தெரிந்தவராக இருக்க வேண்டும். இத்திட்டத்தில் 21 முதல் 40 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், ஒரு குடும்பத்தில் ஒரு பட்டதாரி மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெற முடியும்.
இதில், தொழில் முனைவோராக விருப்பமுள்ள வேளாண் பட்டதாரிகள் உரிய விண்ணப்பத்துடன் கீழ்காணும் ஆவணங்களுடன் வருகிற 20-ந் தேதிக்குள் ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.
10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்
பட்டதாரி சான்றிதழ்
ஆதார் அட்டை
குடும்ப அட்டை
வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல்
வங்கிகளில் பெறப்பட்ட கடன் ஒப்பதல் ஆவணம்
English Summary
Agriculture graduate given grant to start self-employment