சென்னையில் அதிமுக நிர்வாகி கைது – பெண்களை தாக்கிய வழக்கில் நடவடிக்கை!
AIADMK executive arrested in Chennai action taken in case of assault on women
சென்னை மயிலாப்பூர் நொச்சி நகர் பகுதியைச் சேர்ந்த சாமிநாதன், அதிமுக நிர்வாகியாக உள்ளார். சமீபத்தில், அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொருவரின் சைக்கிளை மாற்றி எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இதைக் குறித்து அப்பகுதியில் வசிக்கும் இரண்டு பெண்கள், சாமிநாதனிடம் நேரில் சென்று விளக்கம் கேட்டுள்ளனர். அதற்கிடையே உண்டான தகராறில், சாமிநாதன் அந்த பெண்களில் ஒருவரை கீழே தள்ளி, மானபங்கம் செய்ததாக புகார் எழுந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக, பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில், மயிலாப்பூர் போலீசார் சாமிநாதனை கைது செய்தனர். மேலும், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை சிறையில் அடைத்துள்ளனர்.
English Summary
AIADMK executive arrested in Chennai action taken in case of assault on women