#BigBreaking | அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தேதி அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மார்ச் 26 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளருக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையராக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் விஸ்வநாதனும், தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமனும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிவிப்பில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் தேர்தல் : அதிமுகவின் சட்ட திட்ட விதி: 20 (அ) ; பிரிவு - 2ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, “பொதுச் செயளளர்" கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்" என்ற விதிமுறைக்கு ஏற்ப "கழகப் பொதுச் செயலாளர்" பொறுப்பிற்கான தேர்தல் கீழ்க்கண்ட கால அட்டவணைப்படி நடைபெறும்,

வேட்பு மனு தாக்கல் ஆரம்பம் நாள் : 18.03.2023 - சனிக் கிழமை
(காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை )

வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் : 19.03.2023- ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 3 மணி வரை

வேட்பு மனு பரிசீலனை : 20.03.2023 - திங்கட் கிழமை காலை 11 மணி

வேட்பு மனு திரும்பப் பெறுதல் : 21.03.2023- செவ்வாய் கிழமை பிற்பகல் 3 மணி வரை

வாக்குப் பதிவு நாள் : 26.03.2023 ஞாயிற்றுக் கிழமை
காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை

வாக்கு எண்ணிக்கை : 27.03.2023 - திங்கட் கிழமை காலை 9 மணி முதல்

"கழகப் பொதுச் செயலாளர்" பொறுப்பிற்குப் போட்டியிட விரும்பும் கழக உடன்பிறப்புகள், மேற்கண்ட கால அட்டவணைப்படி, தலைமைக் கழகத்தில் கட்டணத் தொகை ரூ. 25,000/- (ரூபாய் இருபத்தி ஐந்தாயிரம் மட்டும்) செலுத்தி விருப்ப மனுக்களைப் பெற்று, கழக சட்ட விதி - 20அ; பிரிவு - 1, (a), (b), (c) ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி தங்களுடைய விருப்ப மனுக்களைப் பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் வழங்கலாம்.

"கழகப் பொதுச் செயலாளர்"" பொறுப்பிற்கான தேர்தல் முறையாக நடைபெறுவதற்கு, கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் அனைத்து நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்" 

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK General Secretary Election 2023 date


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->