இனி நாங்கதான்..எடப்பாடியின் மாஸ்டர் பிளான்! அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம்! - Seithipunal
Seithipunal


சென்னை : கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளச்சாராய சம்பவத்தை சிபிசி விசாரிக்க வேண்டும் மற்றும் சட்டச்சபை நடப்புக் கூட்டுத்தொடர் முழுவதும் அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்திவருகின்றனர். 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த கள்ளச்சாராயம் சம்பவம் தொடர்பாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டச்சபை கூட்டத்தொடரில் கள்ளக்குறிச்சி சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அதிமுகவினர் சட்டச்சபை கூட்டத்தொடரில் அமளில் ஈடுபட்டதால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பென்ஸ் செய்யப்படுவதாக  சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

இந்தநிலையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. இந்தப் போராட்டத்தில் ஏராளமான அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர்.

இன்று காலை தொடங்கி உண்ணாவிரத போராட்டம் இன்று மாலை 5 மணி வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட உண்ணாவிரத போராட்டம் போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் எந்தவித இடையூறும் செய்யாமல் உண்ணாவிரதபோராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. இது மட்டுமின்றி மேலும் 23 நிபந்தனைகளுடன் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது குறிப்பிட்டதக்கது.

கள்ளக்குறிச்சி சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் நடப்பு கூட்டதொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டத்தை கண்டித்து அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK protesting the suspension


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->