#BigBreaking | அதிமுக செயற்குழு கூட்டம்! வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal


ஏப்ரல் 7ம் தேதி நடைபெறவிருந்த அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்படுவதாக, அதிமுக தலைமை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், வரும் 16 ஆம் தேதி நடைபெறும் என்று மறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு பதில் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று, கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் செயற்குழுவும் ரத்து என அறிவிப்பு வெளியானது.

இது அதிமுகவினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. கடந்த மாதம் நடைபெற்ற அதிமுகவின் பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியின்றி எடப்பாடி பழனிச்சாமி வெற்றிபெற்றார். தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு, பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுள்ளார். 

அதே சமயத்தில் அதிமுக கட்சி விதிமுறைகள் படி, கட்சி தேர்தல் வெற்றிகளை கட்சியின் செயற்குழு மற்றும் பொது குழுவில் ஒப்புதல் பெற வேண்டியது கட்டாயம்.

இந்நிலையில், அதிமுகவின் செயற்குழு வருகின்ற 16ம் தேதி நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட உள்ளது.

இந்த செயற்குழுக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்று இருப்பதற்கு, அதிமுகவின் செயற்குழு ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK Seyarkuzhu meet 16 april 2023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->