தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் திமுகவின் வாயை அடைத்த அதிமுக!
AIADMK silenced DMK in the thoothukudi shooting incident
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு அப்போதைய முதல்வர் பழனிச்சாமி தான் பொறுப்பேற்க வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்திருந்தார். ஆணையத்தின் பரிந்துரைப்படி மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சேர்ந்த 3 வருவாய் துறை அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை அரங்கேற்றிய காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தன்னோட பெயரும் அடிபடுவதால் இதை எவ்வாறு சமாளிப்பது என திணறி வருகிறார் பழனிச்சாமி. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு அப்போதைய முதல்வர் பழனிச்சாமி தான் பொறுப்பு எனவும் அவர் மீது வழக்கு பதிய வேண்டும் எனவும் திமுக நிர்வாகிகள் சிலர் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக திமுகவுக்கு எதிரான அஸ்திரங்களை கையில் எடுக்குமாறு அதிமுக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் பழனிச்சாமி. திமுக ஆட்சியில் நடைபெற்ற மாஞ்சோலை படுகொலை, கோவை குண்டு வெடிப்பு என தி.மு.க ஆட்சிக்காலத்தில் நடந்த சம்பவங்களை வைத்து பதிலடி கொடுக்க உத்தரவிட்டுள்ளாராம் பழனிச்சாமி.
இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவங்களுக்கு கருணாநிதி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். அ.தி.மு.க பொன்விழா நிறைவு பொதுக்கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. திமுக ஆட்சியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவங்களை முன்னிறுத்தி அந்த பொதுக் கூட்டத்தில் பேச உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
English Summary
AIADMK silenced DMK in the thoothukudi shooting incident