மெரினா கடற்கரையில் 'ஏர் ஷோ 2024'!...வேளச்சேரி ரயில் நிலையத்தில் சிக்கித் தவிக்கும் பார்வையாளர்கள்! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள  மெரினா கடற்கரையில் 'ஏர் ஷோ 2024' என்ற பெயரில்  முதல்முறையாக விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த சாகச நிகழ்ச்சியானது இந்திய விமானப்படையின் நிறுவன தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இன்று நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த விமான சாகசத்தில் ரபேல், தேஜஸ், சூகோய் உள்ளிட்ட இந்திய விமானப்படையின் முன்னணி போர் விமானங்கள் பங்கேற்கின்றன. அதுமட்டுமல்லாமல் ஆகாஷ்கங்கா ஸ்கைடைவிங் காட்சி குழுவும் வான்வழி சாகசங்களை நிகழ்த்த உள்ளனர்.

இதன் காரணமாக நேற்று மெரினா கடற்கரை பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்றும்  சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக  சென்னை காமராஜர் சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காமராஜர் சாலையில் காந்தி சிலை, போர் நினைவிடம் இடையே அனுமதி சீட்டுகள் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும், மற்ற வாகனங்கள் ஆர்.கே.சாலைக்கு பதிலாக வாலாஜா சாலையை பயன்படுத்த வேண்டும் என்று, சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் விமானப்படை சாகச நிகழ்ச்சியை காண வேளச்சேரி ரெயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. வேளச்சேரி முதல் சென்னை கடற்கரை வரை பயணிகள் வசதிக்காக கூடுதல் ரெயில்களை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறை அட்டவணைப்படி ரெயில்கள் இயக்கப்பட்டு வருவதால், பயணிகள் கூட்ட நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Air show 2024 at marina beach visitors stranded at velachery railway station


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->