அம்பேத்கர் பிறந்த நாள் விழா..மலர்தூவி மரியாதை செலுத்திய திமுக எம்எல்ஏ அனிபால் கென்னடி! - Seithipunal
Seithipunal


அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சமத்துவ நாளில் மலர்தூவி மரியாதை செலுத்திய திமுக எம்எல்ஏ அனிபால் கென்னடி அவர்கள்,

இந்திய அரசியலமைப்பின் தந்தையும், சமூக நியாயத்தின் முன்னோடியுமான டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பிறந்த நாளான இன்று, சமத்துவ நாளையொட்டி, திமுக மாநில துணை அமைப்பாளரும், திமுக கொறடாவுமான திமுக உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள், தனது தொண்டர்களுடன் இணைந்து, உப்பளம் தொகுதியில் அமைந்துள்ள சோனாம்பாளையம், திப்புராயபேட்டை மற்றும் டாக்டர் அம்பேத்கர் சாலையில் எழுந்துள்ள அவரது திருவுருவ புகை படம் மற்றும் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து, சமத்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் உறுதிமொழி ஏற்கப்பட்டது. சமூக நீதி, சமத்துவம், கல்வி, ஒடுக்குமுறை எதிர்ப்பு உள்ளிட்ட அம்பேத்கரின் கொள்கைகளை நினைவுகூரும் வகையில் வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

“சமத்துவம் என்பது வெறும் வார்த்தையல்ல; அதை நடைமுறை வாழ்க்கையில் நிலைநாட்டவேண்டும்,” என்று திமுக உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி உறுதியுடன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தொகுதி செயலாளர் சக்திவேல், அவை தலைவர் ஹரிகிருஷ்ணன், மாநில  பிரதிநிதி மணிகண்டன், மாநில ஆதி திராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேல், மாநில சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் நோயல், தொகுதி துணை செயலாளர் ராஜி, கிளை செயலாளர்கள் சந்துரு, செல்வம், சேகர், கோமுகி, ஈசாக்கு, மாயவன், ராகேஷ், ராஜா பிரபாகரன், மகளிர் அணி ஜாஸ்லின், வைதிஸ்வரி, நிர்வாகி ஆறுமுகம், தொழில் நுட்ப அணி சுகுமார், இளைஞர் அணி பஸ்கள், மோரிஸ், ரகுமான், பவித்ரன், கார்த்திக், நாவரசன், பரணி,சித்தார்த், திருநாவுக்கரசு பல்வேறு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ambedkar Jayanti DMK MLA Anibal Kennedy pays floral tribute


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->