குட் பேட் அக்லி திரைப்படம் - படக்குழுவினருக்கு இளையராஜா நோட்டீஸ்.!
music director ilaiyaraja notice sent to good bad ugly movie team
பிரபல இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'. இந்தப் படம் சமீபத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்தத் திரைப்படத்தில் அஜித்தின் பழைய படங்களின் ரெஃபெரன்ஸ் காட்சிகள் மற்றும் பாடல்கள் இடம் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. அதிலும் குறிப்பாக சிம்ரன் பங்கு பெறும் காட்சி திரையரங்கில் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
குட் பேட் அக்லி திரைப்படம் வெளியான 3 நாட்களில் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளது.
இந்த நிலையில் அஜித் குமாரின் 'குட் பேட் அக்லி' படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அளித்துள்ளார்.

அந்த நோட்டிஸில், தான் இசையமைத்த பாடல்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாகவும், ரூ. 5 கோடி இழப்பீடு வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதாவது, படத்தில் இடம்பெற்ற ஒத்த ரூபாய் தாரேன், இளமை இதோ இதோ, என் ஜோடி மஞ்சக்குருவி பாடல்களை பயன்படுத்தியதால் இளையராஜா இந்த நோட்டீசை அளித்துள்ளார். இன்னும் 7 நாட்களில் இதுக்குறித்த நடவடிக்கை மற்றும் பாடல்களை நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றுதெரிவித்துள்ளார்.
English Summary
music director ilaiyaraja notice sent to good bad ugly movie team