பரபரப்பு - அதிமுக முன்னாள் அமைச்சர் மருத்துவமனையில் திடீர் அனுமதி.!!
admk ex minister dindukal seenivasan admitted hospital
தமிழகத்தில் வருகின்ற ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அதிமுக-பாஜக கூட்டணி மாநிலம் முழுவதும் தேர்தல் பூத் குழுக்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், திண்டுக்கலில் நடைபெற்ற ஒரு முக்கியக் கூட்டத்தில், கட்சியின் பொருளாளராகவும் முன்னாள் அமைச்சராகவும் இருக்கும் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்த பிறகு, சென்னையில் தங்கியிருந்த அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து, அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவ பரிசோதனைகள் மூலம், செரிமான கோளாறு காரணமாகவே இந்த உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
admk ex minister dindukal seenivasan admitted hospital