அஞ்சலிக்கு ஜோடியாக சினிமாவில் அறிமுகமான சிரஞ்சீவியின் 'விஸ்வம்பரா' பட இயக்குனர்..?
The director of Chiranjeevi film Vishvambara which made its debut in cinema opposite Anjali
தெலுங்கு இயக்குனர் வசிஷ்டா மல்லிடி. நந்தமுரி கல்யாண் ராமின் 'பிம்பிசாரா' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். இவர் தற்போது சிரஞ்சீவி நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான விஸ்வம்பராவை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான 'ராமராமா' வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 'விஸ்வம்பரா' விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், வசிஷ்டா மல்லிடி சினிமாவில் இயக்குனராவதற்கு முன்பு நடிகராக அவதாரம் எடுத்தவர். இவர் அஞ்சலுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். அதாவது, கடந்த 2017-ஆம் ஆண்டு மறைந்த பாடலாசிரியர் குலசேகரின் இயக்கத்தில் வெளியான 'பிரேமலேகா ராசா'என்ற படத்தில் நடித்துள்ளார். ஆனால், இப்படம் திரையரங்குகளுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
The director of Chiranjeevi film Vishvambara which made its debut in cinema opposite Anjali