சூடுபிடிக்கும் 'ஜனநாயகன்'....!!! அனிருத்துடன் இணைந்த பிரபல கேரளா ராப் பாடகர் யார் தெரியுமா?
famous Kerala rapper teamed up with Anirudh in jana naayagan movie
நடிகர் விஜய் தனது கடைசி படமான 'ஜன நாயகன்' படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார்.இதில் பூஜா ஹெக்டே, பாபி தியோல்,மமீதா பைஜூ உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி உலகளவில் வெளியாகவுள்ளது. இது தற்போது இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
இது விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் ஒன்றை பிரபல ராப் பாடகரான 'ஹனுமான்கைன்ட்' என்பவர் பாடியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இவர் கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபலமான 'ஹிப்ஹாப் பாடகர்' ஆவார். இவர் சில மாதங்களுக்கு முன் 'பிக் டாக்ஸ்' என்ற ஆல்பம் பாடலை அவரே எழுதி இசையமைத்து வெளியிட்டார்.
அந்த ஆல்பம் மிகப்பெரிய அளவில் கவனத்தை பெற்றது. அதைத்தொடர்ந்து சமீபத்தில் 'ரன் இட் அப்' என்ற பாடலை வெளியிட்டார். இதனால் இவரின் குரலை தமிழ் பாடலில் கேட்க ஆவலுடன் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
English Summary
famous Kerala rapper teamed up with Anirudh in jana naayagan movie