என்.ஐ.ஏ சோதனை - சென்னையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கைது.!
ambulance driver arrested for support isis team in chennai
தமிழகத்தில் சிலர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக கிடைத்த தகவலின் படி சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் புறநகர் பகுதிகளிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாசல் கிராமத்தில் மட்டும் 15 இடங்களிலும் என்.ஐ.ஏ. சோதனை நடைபெறுகிறது.
காலையிலிருந்து நடைபெற்ற இந்த சோதனையில் புரசைவாக்கம் கஸ்தூரி ஆம்புலன்ஸ் சர்வீஸ் நிறுவனத்தில் பணியாற்றிய ஓட்டுநர் அல்பாசித் அமீனை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.
![](https://img.seithipunal.com/media/nia-rep1-1699461668-6t2re.jpg)
இவருக்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல் பகுதியைச் சேர்ந்தவராவார்.
சென்னையில் எட்டு மாதங்களாக ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றிக்கொண்டே ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது. கேரளாவை சேர்ந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு ஆவணங்களை கைப்பற்றிய நிலையில் அல்பாசித்தை கைது செய்துள்ளனர்.
English Summary
ambulance driver arrested for support isis team in chennai