தேர்தல் முடிவு - டார்கெட் தமிழகம்! இந்த தடவை மிஸ் ஆகாது! மோடியை தொடர்ந்து அமித்ஷா!  - Seithipunal
Seithipunal


பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா வருகின்ற மே 30 ஆம் தேதி தமிழகம் வர உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பலமுறை தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழகம் வரத் திட்டமிட்ட அமித்ஷா, கடைசி நேரத்தில் அவரின் வருகை ரத்து செய்யப்பட்ட நிலையில், வருகின்ற 30 ஆம் தேதி அவர் தமிழகம் வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

தமிழகம் வரும் அமித்ஷா திருமயத்தில் உள்ள கோட்டை பைரவர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளதாகவும், அரசியல் கட்சி தலைவர்கள் சிலரை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 30 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வர இருக்கிறார். அங்குள்ள விவேகானந்தர் பாறையில் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் தொடர்ந்து தியானம் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடற்கரைப் பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amit shah TN Visit may 30


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->