மீண்டும் பொதுச்செயலாளர் ஆனார் டிடிவி தினகரன்! தலைவர் யார்?
AMMK Head Election 2023
சென்னையில் இன்று நடைபெற்ற உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் டிடிவி தினகரனை மீண்டும் பொதுச்செயலாளராக பொதுக்குழு தேர்ந்தெடுத்துள்ளது.
சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியானது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு இதுவரை தலைவர் யாரும் தேர்ந்தெடுக்கப்படாத நிலையில், இந்த பொதுக்குழு கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடத்த முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி. கோபாலன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
துணைத்தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் அன்பழகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வம், தற்போது டிடிவி தினகரனுடன் கைகோர்த்து உள்ள நிலையில், இந்த பொதுக்குழு கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நடக்க உள்ள மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கலாம், மூன்றாவது அணியை உருவாக்கலாமா என்பது குறித்து இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.