அடுத்த பரபரப்பு! அடுத்தடுத்து மயக்கம் போட்டு விழுந்த 25 பெண்கள்! பதற்றத்தில் தூத்துக்குடி! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் மீன் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா கசிவு ஏற்பட்டு 25 பெண்கள் அடுத்தடுத்து மயங்கி கிழே விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடியில் தனியார் மீன் பதப்படுத்தும் ஆலை இயங்கி வருகிறது. அந்த ஆலையில் திடீரென ஏற்பட்ட அமோனியா  வாயு கசிவு காரணமாக பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 25 பெண்கள் மூச்சு திணறல் காரணமாக அடுத்தடுத்து மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

மயக்கமடைந்த ஊழியர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் உதவியுடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு மருத்துவமனையில் அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த குனியமுத்தூர் போலீசார் மீன் பதப்படுத்தும் ஆலையில் சோதனை செய்தனர். மீன் பதப்படுத்தும் ஆலையின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களிடம்  இது குறித்து விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை மேலும் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மீன் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு மூச்சு திணறல் காரணமாக அடுத்தடுத்து 25 பெண்கள் மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ammonia leak in a fish processing plant in Tuticorin resulted in 25 women fainting


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->